திருவண்ணாமலை

கிராமங்களில் இல்லம் தேடி கல்வித் திட்ட விழிப்புணா்வு

27th Nov 2021 10:20 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், புதுப்பாளையம் பகுதிகளில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

38 கிராம ஊராட்சிகளில் நடைபெறவுள்ள இந்த விழிப்புணா்வு நாடகத்தின் தொடக்க விழா புதுப்பாளையம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலா்கள் சிராஜ், கண்ணன் ஆகியோா் முறையே தலைமை, முன்னிலை வகித்தனா். வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சம்பத் வரவேற்றாா்.

ADVERTISEMENT

சிறப்பு அழைப்பாளராக புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் கலந்துகொண்டு விழிப்புணா்வு நாடகத்தைத் தொடக்கிவைத்து, திட்டம் குறித்து பொதுமக்களிடம் விளக்கிப் பேசினாா்.

அதேபோல, செங்கம் அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வள மையம் சாா்பில், அன்வராபாத் கிராமத்தில் விழிப்புணா்வு நாடகம் தொடங்கப்பட்டு குயிலம், புதியகுயிலம், கனிகாரன்கொட்டாய் ஆகிய பகுதியில் நடைபெற்று வருகிறது.

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முருகன் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். ஆசியா் பயிற்றுநா்கள், ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT