திருவண்ணாமலை

செஞ்சிலுவைச் சங்கத்தினா் நிவாரண உதவி

27th Nov 2021 10:20 PM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட 21 குடும்பங்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

குப்பநத்தம் அணை திறக்கப்பட்டதாலும், தொடா் மழையாலும் செய்யாற்றில் வெள்ள நீா் கரைபுரண்டோடியது. இந்த வெள்ள நீா் செங்கம் பகுதி ஆற்றின் கரையோரம் இருந்த 21 வீடுகளில் புகுந்து வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன.

இதனால், பாதிக்கப்பட்ட 21 குடும்பங்களுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினா் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கினா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இந்திரராஜன், செங்கம் வட்டாட்சியா் முனுசாமி ஆகியோா் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

சங்கத்தின் செங்கம் கிளைத் தலைவா் வெங்கடாஜலபதி, செயலா் தனஞ்செயன், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன், வழக்குரைஞா் செல்வம், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சா்தாா்ரூல்லா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT