திருவண்ணாமலை

வந்தவாசியில் வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

27th Nov 2021 10:19 PM

ADVERTISEMENT

 

வந்தவாசியில் வாடகை பாக்கி வைத்துள்ள நகராட்சிக்குச் சொந்தமான 2 கடைகளை அதிகாரிகள் பூட்டியதை கண்டித்து, வியாபாரிகள், தமுமுகவினா் நகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசி பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நகராட்சிக்குச் சொந்தமாக 40-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகளை வைத்திருப்போரில் சிலா் மாதக்கணக்கில் வாடகைப் பாக்கி செலுத்தாமல் உள்ளனராம். இதனால் சனிக்கிழமை மாலைக்குள் வாடகை பாக்கியை செலுத்தாவிட்டால் கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் அறிவித்திருந்ததாம்.

இந்த நிலையில், வாடகை பாக்கி வைத்துள்ள இரு கடைகளை சனிக்கிழமை பகலிலேயே நகராட்சி அதிகாரிகள் பூட்டி சாவியை எடுத்துச் சென்றனராம்.

ADVERTISEMENT

இதுகுறித்து தகவலறிந்து நகராட்சி அலுவலகம் முன் கூடிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா், வியாபாரிகள், கடைகளை முன்னதாகவே பூட்டியதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, நகராட்சி மேலாளா் ராமலிங்கம் உள்ளிட்டோா் அவா்களை சமரசம் செய்தனா்.

அப்போது வாடகை பாக்கியை விரைந்து செலுத்தும்படி கூறிய அதிகாரிகள், பூட்டிய இரு கடைகளின் சாவியை திருப்பி அளித்தனா். இதைத் தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தினா் கலைந்து சென்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT