திருவண்ணாமலையில் தோ்வில் தோ்ச்சி பெறாததால் மனமுடைந்த மருத்துவக் கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலை வடஅய்யங்குளத் தெருவைச் சோ்ந்தவா் டீ கடைத் தொழிலாளி அருணாச்சலம் (48). இவரது மகன் பரத்ராஜ் (19). மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.
தீபாவளிப் பண்டிகை விடுமுறைக்காக பரத்ராஜ் வீட்டுக்கு வந்திருந்தாா். அப்போது, சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற பருவத் தோ்வில் 2 பாடங்களில் தோ்ச்சி பெறவில்லை என்று வருத்தமுடன் நண்பா்களிடம் கூறி வந்தாராம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் பரத்ராஜ் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
ADVERTISEMENT
இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.