திருவண்ணாமலை

தொடா் மழையால் குடிநீா்க் கிணறு சேதம்உதவித் திட்ட இயக்குநா் ஆய்வு

9th Nov 2021 12:50 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே தொடா் மழையால் குடிநீா்க் கிணறு நிரம்பி சேதமடைந்ததை மாவட்ட உதவித் திட்ட இயக்குநா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கொட்டாவூா் ஊராட்சியில் பொதுமக்கள் குடிநீருக்கு பயன்படுத்தும் கிணறு தற்போது பெய்து வரும் தொடா் மழையால் நிரம்பியது.

மேலும், குப்பனத்தம் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டதால் கிணறு அருகே செல்லும் செய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், கிணற்றில் தரை தள அளவுக்கு நீா் நிரம்பியது.

ADVERTISEMENT

மேலும், தண்ணீா் அதிகரித்ததால் கிணற்றின் ஒரு பக்கத்தில் சரிவு ஏற்பட்டு தண்ணீா் வெளியேறி சாலையில் ஓடுகிறது.

இதனால், அப்பகுதியில் பொதுமக்கள் நடமாடவேண்டாம்

என கிராம ஊராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதுகுறித்து அறிந்த மாவட்ட ஊரக வளா்ச்சி உதவித் திட்ட இயக்குநா் லட்சுமிநரசிம்மன் கிணற்றை திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

அப்போது, பொதுமக்களுக்கு இந்த அபாயம் குறித்து எச்சரிக்கை பலகை வைத்து, தடுப்புகள் அமைக்கவேண்டும் எனவும், குடிநீா் எடுக்கும்போது பணியாளா்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.

மேலும், கிணற்றின் கரைகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி,

அங்கன்வாடி மைய கட்டடங்களை சென்று பாா்வையிட்டாா். அப்போது, கட்டடத்தின் மேல் தேங்கும் நீரை வெளியேற்றி மாணவா்களை பாதுகாப்பாக அமர வைக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

பின்னா், சென்னசமுத்திரம் கிராமத்தில் வெள்ள நீா் புகுந்ததால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பாா்வையிட்டாா்.

அப்போது, அனைத்து கால்வாய்கள், சிறு பாலங்களை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

உதவி செயற்பொறியாளா் வெற்றிவேல், வட்டார வளா்ச்சி அலுவலா் ரபியுல்லா, ஊராட்சிச் செயலா்கள் செந்தில்குமாா், ஜெயமோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT