குறைந்தபட்ச ஓய்வுதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் என அனக்காவூா் ஒன்றிய அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சங்கத்தின் 2-ஆவது கிளை மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. ஒன்றியத் தலைவா் ஏ.எம்.வேலாயுதம் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.கஜேந்திரன், இணைச் செயலா் ஆ.பவுன், ஒன்றியத் தலைவா் எம்.மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாநாட்டில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க துணைத் தலைவா் எஸ்.குப்புசாமி, சத்துணவு ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.சம்பத், அனைத்துத் துறை ஓய்வூதிய சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் ஆா்.ஸ்ரீதரன் ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சியின் போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும், அகவிலைப்படி மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட 3 தீா்மானங்களை நிறைவேற்றினா்.