திருவண்ணாமலை

அனைத்து சமுதாயத்தினருக்கான ஆம்புலன்ஸ் சேவை: அமைச்சா் மஸ்தான் தொடக்கி வைத்தாா்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் அனைத்து சமுதாய மக்களுக்கான அவசரகால ஊா்தி சேவையை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் தொடக்கிவைத்தாா்.

  வந்தவாசி பெரிய பள்ளிவாசல் ஜாமிஆ மஸ்ஜித் சாா்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக அவசரகால ஊா்தி சேவை தொடங்கப்பட்டது.

பெரிய பள்ளிவாசல் அருகே சனிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் பள்ளிவாசல் நிா்வாகி அப்துல்காதா்ஷரீப் தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் கே.எம்.மீரா, கே.அப்துல்மஜீத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 

தமிழக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் அவசரகால ஊா்தி சேவையை தொடக்கிவைத்துப் பேசினாா்.

எம்.எல்.ஏ.க்கள் எஸ்.அம்பேத்குமாா் (வந்தவாசி), ஒ.ஜோதி (செய்யாறு), மணப்பாறை பி.அப்துல்சமது, திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

நிகழ்ச்சியில் 200 பேருக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறி ஆகிய நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து அருகில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சா் தொடக்கிவைத்தாா். மேலும் அவா் கரோனா பரிசோதனை செய்து கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT