திருவண்ணாமலை

செய்யாறில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் தொடக்கம்

4th Jan 2021 02:25 PM

ADVERTISEMENT

செய்யாறு தொகுதியில் 8 இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2500 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை எம்.எல்.ஏ.தூசி.கே.மோகன் தொடங்கி வைத்தார். 

தமிழகத்தில் 12524 ஊராட்சிகளில் உள்ள 2.10 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.5500 கோடி மதிப்பில், ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரருக்கு தலா ரூ.2500 மற்றும் கரும்பு, பாதாம், முந்திரி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக முதலவர் எடப்பாடி கே.பழனிச்சாமி அன்மையில் அறிவித்து இருந்தார். அதன் படி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதியான செய்யாறு வட்டத்தில் 66 ஆயிரத்து 118 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.16 கோடியே 52 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் பொங்கல் தொகுப்பும், ஒரு குடும்ப அட்டைக்கு தலா ரூ.2500 வழங்கும் நிகழ்ச்சியும், வெம்பாக்கம் வட்டத்தில் 38 ஆயிரத்து 622 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு  பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

செய்யாறு வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.மகேந்திரன் தலைமைத் தாங்கினார். துணைத் தலைவர் சுதாகர் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.தூசி.கே.மோகன் பங்கேற்று குடும்ப அட்டைத்தாரர்களுக்கு தலா ரூ.2500 -ம் பொங்கல் தொகுப்பு வழங்கி இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். அப்போது, அவர் குறிப்பிடுகையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் 2.10 கோடி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் தொகுப்போடு ரூ.2500 வழங்கப்படுகிறது.

மேலும், இன்னும் ஒரிரு நாள்களில் தொடர் புயல் மழையால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படவுள்ளது என்றும், இவ்வாறு அனைத்துத் தரப்பு மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் அதிமுக அரசுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துப் பேசினார்.

ADVERTISEMENT

முன்னதாக திருப்பனங்காடு, பெரூங்கட்டூர், மோரணம், வடபூண்டிப்பட்டு, வாக்கடை, வடதின்னலூர், வீரம்பாக்கம் ஆகிய கிராமங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2500 மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை எம்.எல்.ஏ.தூசி.கே.மோகன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் மாமண்டூர் டி.ராஜூ, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் டி.பி.துரை, சி.துரை, எம்.அரங்கநாதன், வே.குணசீலன், ஏ.அருணகிரி, எஸ்.ரவிச்சந்திரன், ஏ.ஜனர்த்தனம், பி.லோகநாதன்,  ஆர்.கே.மெய்யப்பன், ஜி.கோபால், கோவிந்தராஜூ, செபாஸ்டின்துரை, பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
 

Tags : pongal gift
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT