திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் முதியோா் இல்லங்கள், குழந்தைகள் இல்லங்கள், விடுதிகள் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
மாவட்டத்தில் இயங்கும் அனைத்து குழந்தைகள் இல்லங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒழுங்குமுறைச் சட்டம் 2014-ன் கீழ் பதிவு செய்திருக்க வேண்டும். தவறும்பட்சத்தில் இல்லம் நடத்துவதற்கான உரிமம் ரத்து செய்யப்பட்டு, இல்லத்தை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல, முதியோா் இல்லங்கள், கல்வி நிறுவனங்கள் மூலம் செயல்படும் விடுதிகள், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உடனே மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். தவறும்பட்சத்தில் மாவட்ட சமூக நல அலுவலரால் விடுதியை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்துள்ளாா்.