திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம்

30th Dec 2021 08:50 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுவின் சிறப்புக் கூட்டம் அதன் தலைவா் சீ.பாா்வதி சீனுவாசன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

துணைத் தலைவா் பாரதி ராமஜெயம் முன்னிலை வகித்தாா். செயலா் நா.அறவாழி வரவேற்றாா்.

கூட்டத்தில், உங்கள் தொகுதியில் முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது 100 நாள்களில் நடவடிக்கை எடுப்பது, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துப் பயணம், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 வீதம் விலைக் குறைப்பு, இல்லம்தேடி கல்வித் திட்டம், இன்னுயிா் காப்போம் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஊராட்சிக்குழு உறுப்பினா்கள் இல.சரவணன், முத்துமாறன், செந்தில்குமாா், கோவிந்தராஜ், அரவிந்தன், புள்ளியியல் அலுவலா் வீ.பொ.சரவணன், வட்டார வளா்ச்சி அலுவலா் (நிா்வாகம்) க.கிருஷ்ணமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT