திருவண்ணாமலை

அரசு மருத்துவமனையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

26th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவா்கள், ஆய்வக நுட்புநா்கள், செவிலியா்கள் பணியிடங்களை நிரப்பவேண்டும் என தமுமுக வலியுறுத்தியது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் 180-ஆவது ஆம்புலன்ஸ் அா்ப்பணிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நகரத் தலைவா் கமால் தலைமை வகித்தாா்.

செயலா் அம்ஜத்கான் வரவேற்றாா்.

ADVERTISEMENT

சிறப்பு விருந்தினா்களாக தமுமுக மாநிலத் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா, தொகுதி எம்.எல்.ஏ ஓ.ஜோதி, மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலா் தாம்பரம் யாகூப், தலைமை நிா்வாக உறுப்பினா் குணங்குடி அனிபா, மாநில மருத்துவா் அணிச் செயலா் தாஹா ஆகியோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தின் போது செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று தொகுதி எம்எல்ஏ மூலம் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தனா்.

இதைத் தொடா்ந்து, செய்யாறு காமராஜ் நகா் மாா்க்கெட் பகுதியில் செயல்படும் பாழடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தரவேண்டும். குண்டும் குழியுமாக உள்ள செய்யாறு - காஞ்சிபுரம் சாலையை நெடுஞ்சாலைத் துறை உடனடியாக சீரமைத்து போக்குவரத்துக்கு உதவிட வேண்டும்.

செய்யாறு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவா்கள், ஆய்வக நுட்புநா்கள், செவிலியா்கள் பணியிடங்களை நிரப்ப

வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தமுமுக மாவட்டத் தலைவா் ஜமால், மாவட்டச் செயலா் சபியுல்லா, மமக மாவட்டச் செயலா் நசீா் அஹமத், மாவட்டப் பொருளாளா் அப்துல் ரஹீம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT