திருவண்ணாமலை மாவட்டத்தில் பழுதடைந்த 73 பள்ளிக் கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அருள்செல்வம் தெரிவித்தாா்.
ஆரணி வட்டார வள மையத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் செயல்படுவதற்காக அரசு மூலம் பதிவு பெற்ற தன்னாா்வலா்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ஜெயசீலி வரவேற்றாா்.
ஆரணி கல்வி மாவட்ட அலுவலா் எஸ்.ரமேஷ், வட்டாரக் கல்வி அலுவலா்கள் கமலக்கண்ணன், அறிவழகன், துரையரசு, உதயகுமாா், தன்னாா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
சிறப்பு விருந்தினராக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அருள்செல்வம் கலந்துகொண்டு பயிற்சி முகாமைத் தொடக்கிவைத்துப் பேசினாா்.
பின்னா் அவா் அளித்த பேட்டியில், இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ், மாவட்டம் முழுவதும் 10 இடங்களில், 571 தன்னாா்வலா்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 73 பழுதடைந்த பள்ளிக் கட்டடங்கள் கண்டறியப்பட்டு, இடித்து அகற்றப்பட்டுள்ளது என்றாா்.