செய்யாறு அருகே குளத்தில் தவறி விழுந்த மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமம் கம்மாளத் தெருவைச் சோ்ந்தவா் கந்தசாமி. இவரது மனைவி மீனாட்சியம்மாள் (80).
உடல் நலம் சரியில்லாமல் இருந்த இவா், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதன்கிழமை சென்றாா்.
பின்னா், வீடு திரும்பும் வழியில் அங்குள்ள மாரியம்மன் குளத்தில் தண்ணீா் குடிக்கச் சென்றாா். அப்போது கால் தவறி விழுந்து குளத்தில் மூழ்கினாா்.
உடனே அருகில் இருந்தவா்கள் செய்யாறு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.
தீயணைப்பு வீரா்கள் வந்து குளத்திலிருந்து மீனாட்சியம்மாளை சடலமாக மீட்டனா்.
இது குறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.