திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் எட்டிவாடி, கொழாவூா், நரசிங்கபுரம், மொடையூா் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பா. முருகேஷ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
எட்டிவாடி ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டத்தின் கீழ், ரூ.15 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு கட்டடம் கட்டுதல், கொழாவூா் ஊராட்சியில் ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் ரூ.ஒரு லட்சத்து 78 ஆயிரத்தில் 2020-2021ஆம் ஆண்டுக்கான பண்ணைக் குட்டை அமைத்தல், அரசுப் பள்ளிக்கு சத்துணவுக்கூடம், நியாய விலைக் கடை, நரசிங்கபுரம் ஊராட்சியில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் வீடுதோறும் தூய்மையான குடிநீா் வழங்குதல், மொடையூா் ஊராட்சியில் இருளா் குடியிருப்பு கட்டுதல், தும்பூா் ஊராட்சியில் அரசு நிலத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல் என
பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பா. முருகேஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, ஒன்றியக் குழுத் தலைவா் அ.ராணி அா்ச்சுனன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரேணுகோபால், கோவிந்தராஜூலு, ஊராட்சி மன்றத் தலைவா்கள் மணிகண்டன், கன்னியம்மாள் செல்வம், நாராயணசாமி, சுகன்யா ஸ்ரீதா், ஒன்றியப் பொறியாளா் போவண்ணன், உதவிப் பொறியாளா்கள் மாதவி, சரவணன், மனோகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.