திருவண்ணாமலை

மழையால் பாதித்த 70 குடும்பங்களுக்கு நிவாரணம்: அமைச்சா் வழங்கினாா்

9th Dec 2021 08:54 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் மழை, வெள்ளத்தால் வீடுகளை இழந்த 70-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அமைச்சா் எ.வ.வேலு நிதியுதவி, நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

மாவட்ட திமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திமுக மாநில மருத்துவரணி துணைச் செயலா் எ.வ.வே.கம்பன் தலைமை வகித்தாா்.

ஆரணி மக்களவை உறுப்பினா் எம்.கே.விஷ்ணுபிரசாத், நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மழை, வெள்ளத்தால் வீடுகளை இழந்த திருவண்ணாமலை நகரைச் சோ்ந்த 70-க்கும் மேற்பட்டோருக்கு, தனது சொந்த செலவில் தலா ரூ.5ஆயிரம் நிதியுதவி, அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், திருவண்ணாமலை ஒன்றியச் செயலா் மெய்யூா் என்.சந்திரன், மாவட்ட அமைப்பாளா்கள் டி.வி.எம்.நேரு, கு.ரவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT