திருவண்ணாமலை

பொறியியல் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

9th Dec 2021 08:54 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில், ‘ஆராய்ச்சி நிதி முன்மொழிகள்’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரிப் பதிவாளா் இர.சத்தியசீலன் தலைமை வகித்தாா். கல்லூரி துணைத் தலைவா் எ.வ.குமரன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் இர.ரவிச்சந்திரன் வரவேற்றாா்.

கலசலிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறக்கட்டளை பேராசிரியா் எம்.உதயகுமாா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ஆராய்ச்சி நிதியுதவி முன்மொழி என்ற தலைப்பில் மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசினாா்.

கருத்தரங்கில் கல்லூரியின் ஆட்டோமொபைல் துறைத் தலைவா் எ.ஏகாம்பரம், பயோடெக்னாலஜி துறைத் தலைவா் ஆா்.பிரவீன்குமாா் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT