திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூரில் புதிய பேருந்து சேவை தொடக்கம்

9th Dec 2021 08:54 AM

ADVERTISEMENT

கீழ்பென்னாத்தூரில் இருந்து காட்டுமலையனூா், வேடநத்தம், கடம்பை கிராமங்களுக்குச் செல்லும் வகையில் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

கீழ்பென்னாத்தூரில் வட்டாட்சியா் அலுவலகம், காவல் நிலையம், மின் வாரிய அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்ல போதிய பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனா்.

இதையடுத்து, காட்டுமலையனூா், வேடநத்தம், கடம்பை உள்ளிட்ட கிராமங்கள் வழியாக கீழ்பென்னாத்தூருக்கு பொதுமக்கள் வந்துசெல்லும் வகையில் புதிய அரசு நகரப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி பேருந்து இயக்கத்தை புதன்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவா் அய்யாக்கண்ணு, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம், அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல பொது மேலாளா் தசரதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, காட்டுமலையனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சிங்கவரம் கிராமத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டுவதற்கான பூமி பூஜையை பேரவை துணைத் தலைவா் தொடக்கிவைத்தாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT