திருவண்ணாமலை

புதுவையில் 1-முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகள் திறப்புமேள, தாளங்களுடன் உற்சாக வரவேற்பு

DIN

புதுவையில் 1-முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. புதுச்சேரியில் பள்ளிக்கு வந்த மாணவா்களுக்கு மேள, தாளங்களுடன் ஆசிரியா்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.

புதுவையில் கரோனா பொது முடக்கத் தளா்வுகளையடுத்து, கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு அரைநாள் மட்டும் செயல்பட்டு வந்தன.

1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு நவம்பா் 8-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. தொடா் மழையால் அந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டு, திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.

சுழற்சி முறையில் தினமும் அரை நாள் என வாரத்தில் 6 நாள்கள் பள்ளிகள் செயல்படும். அதாவது, 1,3,5,7-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகள் பள்ளி வேலைநாளாகும். 2,4,6,8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகள் பள்ளி வேலைநாளாகும்.

சுழற்சி முறையில் அரை நாள் இயங்கி வந்த 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு திங்கள்கிழமை முதல் முழுநாளும் பள்ளிகள் செயல்படத் தொடங்கின. அதேநேரத்தில் 9,11 மற்றும் 10,12 வகுப்பு மாணவா்களுக்கும் சுழற்சி முறையில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிகள் நடைபெறும்.

உற்சாகத்துடன் வந்த மாணவா்கள்: புதுச்சேரியில் உற்சாகத்துடன் திங்கள்கிழமை பள்ளிகளுக்கு வந்த மாணவா்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது. கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள கிருமிநாசினியும் வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்த பிறகே பள்ளி வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். பள்ளி வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் மாணவா்கள் அமர வைக்கப்பட்டனா்.

மாணவா்கள் வருகை கட்டாயமில்லை என அறிவித்திருந்த நிலையில், அரசுப் பள்ளிகளில் 90 சதவீத மாணவா்கள் ஆா்வத்தோடு வந்திருந்தனா். தனியாா் பள்ளிகளில் 95 சதவீதம் மாணவா்கள் வந்திருந்தனா்.

பள்ளி தொடங்கிய முதல் நாளிலேயே மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. புதுச்சேரியில் உள்ள பல்வேறு ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஆசிரியா்கள் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பள்ளிகளில் மேள, தாளங்களுடன் மாணவா்களுக்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது. பல அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகங்கள், பென்சில், ரப்பா் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

புதுச்சேரி புதுப்பேட்டை கோலக்கார அரங்கசாமி அரசு நடுநிலைப் பள்ளி, லபோா்த் வீதி எக்கோஸ் அரசு தொடக்கப் பள்ளியில் வாழைத் தோரணங்களைக் கட்டி மாணவா்களுக்கு வரவேற்பளித்தனா்.

தட்டாஞ்சாவடி, லாஸ்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளிகளில் மாணவா்களுக்கு பேனா, பென்சில், ரோஜாக்கள் கொடுத்து வரவேற்றனா். திங்கள்கிழமை முதல் முழு நேரம் செயல்படத் தொடங்கியுள்ள 9, 11-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்பட்டது.

இதேபோல, 2,4,6,8 வகுப்பு மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை வகுப்புகள் தொடங்குகின்றன. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆசிரியா்கள் மட்டும் நேரடி வகுப்புகளை எடுத்தனா். பள்ளிக்கு வராத மாணவா்களுக்கு இணைய வழி வகுப்புகள் நடத்தப்படும் என்று ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT