திருவண்ணாமலை

பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

DIN

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றி பரவி வரும் இந்தச் சூழலில் பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என்று சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி கூறினாா்.

வேட்டவலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அருணை மருத்துவக் கல்லூரி சாா்பில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சனிக்கிழமை இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு, மருத்துவக் கல்லூரியின் துணைத் தலைவா் எ.வ.குமரன் தலைமை வகித்தாா். கல்லூரி இயக்குநா் எ.வ.வே.கம்பன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் பி.ஜெயக்குமாா் வரவேற்றாா்.

தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மருத்துவ முகாமைத் தொடக்கி வைத்துப் பேசுகையில், ஒமைக்ரான் தொற்று பரவி வரும் இந்தச் சூழலில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். எங்கு சென்றாலும் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். வீடு தேடி மருத்துவம் வசதியையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, ஏழை-எளிய மக்களுக்கு ரூ.3 லட்சத்தில் மருத்துவ நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரியின் மருத்துவக் கண்காணிப்பாளா் பி.குப்புராஜ் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT