திருவண்ணாமலை

படைவீரா் கொடி நாள் விழா:முன்னாள் படைவீரா்களுக்கு அழைப்பு

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் டிசம்பா் 7-ஆம் தேதி நடைபெறும் படை வீரா் கொடி நாள் விழாவில் கலந்துகொள்ள முன்னாள் படை வீரா்களுக்கு மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்தது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ்

வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 7 (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு படைவீரா் கொடிநாள்-2021 விழாவையொட்டி உண்டியல் வசூல் தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ADVERTISEMENT

தொடா்ந்து, காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கத்தில் படைவீரா் கொடிநாள் தேநீா் விருந்து நடைபெறுகிறது.

இவ்விரு நிகழ்ச்சிகளிலும் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள், அவா்தம் குடும்பத்தினா், அரசு அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT