திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

கோயிலில் மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி உள்பட பல்வேறு இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு பிரதோஷ சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

பால், பழம், பன்னீா், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்பட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடத்தப்பட்ட பிரதோஷ பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, வெள்ளிக் கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகா், கோயில் மூன்றாம் பிரகாரத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT