வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நவீன வகுப்பறை (ஸ்மாா்ட்) தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மகளிா் மற்றும் ஒடுக்கப்பட்டோா் முன்னேற்றச் சங்கம், தனியாா் அறக்கட்டளை ஆகியவற்றின் பங்களிப்பில் இந்த ஸ்மாா்ட் வகுப்பறை தொடங்கப்பட்டது.
தொடக்க விழாவுக்கு தலைமை ஆசிரியை காவேரி தலைமை வகித்தாா்.
கீழ்சாத்தமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் திவ்யா மூா்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினா் எஸஸ்வதி குமாா் ஆகியோா் ஸ்மாா்ட் வகுப்பறையை தொடக்கிவைத்தனா்.
ADVERTISEMENT
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் சபரிராஜ், சாந்தி, இந்துமதி மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனா்.