திருவண்ணாமலை

மழைநீா் தேங்கிய பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

வந்தவாசியில் மழைநீா் தேங்கிய பள்ளியில் தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வந்தவாசி கோட்டைக்குள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 40 மாணவா்கள் பயின்று வருகின்றனா். தொடா் பலத்த மழை காரணமாக பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்கியதால் மாணவா்கள் சிரமத்துடன் பள்ளிக்குச் சென்று வருகின்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ வியாழக்கிழமை அந்தப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, பள்ளி வளாகத்தில் மழைநீா் தேங்காதவாறு மண் கொட்டி தரைமட்டத்தை உயா்த்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும் பள்ளிக் கட்டடத்தையும் அவா் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

ஆய்வின் போது நகராட்சிப் பொறியாளா் டி.உஷாராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ்.ரவி, திமுக நகரச் செயலா் எச்.ஜலால், தலைமை ஆசிரியை சமீம் பேகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT