திருவண்ணாமலை

செங்கத்தில் தினசரி போக்குவரத்து நெரிசல்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் தினசரி காலை முதல் மாலை வரை ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணவேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

செங்கம் நகரில் துக்காப்பேட்டை முதல் பழைய பேருந்து நிலையம் வழியாக, போளூா் மேம்பாலம் வரை காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதற்குக் காரணம் சென்னை, பெங்களூா் போன்ற பகுதியிலிருந்து நகரில் உள்ள கடைகளுக்கு பொருள்கள் ஏற்றி வரும் லாரிகளை சாலையோரம் நிறுத்தி மூட்டைகளை இறக்குவது, சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பால் சாலை குறுகிப்போனது ஆகியவையாகும்.

மேலும் சாலையின் இருபுறமும் தள்ளுவண்டி, தற்காலிக் கடைகள் என சாலையை ஆக்கிரமித்துவிட்டன.

இதனால் வாகனங்கள் சாலையோரம் நின்றால் வேறு வாகனம் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும், சுபவிசேஷ நாள்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் வருவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

செங்கம் காவல் துறையும், நெடுஞ்சாலைத் துறையினரும் கண்டுகொள்வதில்லை.

இதனால், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காணவேண்டும் என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT