திருவண்ணாமலை

செய்யாறு தொகுதியில் 81.67 சதவீத வாக்குகள் பதிவு

7th Apr 2021 09:08 AM

ADVERTISEMENT

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தலில் 81.67 சதவீத வாக்குகள் பதிவானது. வாக்குப்பதிவு காலையில் விறுவிறுப்பாகவும், மாலையில் மந்தமாகவும் இருந்தது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தலில் திமுக, அதிமுக, அமமுக, மநீம, நாதக மற்றும் சுயேச்சைகள் என 15 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா்.

தொகுதியில் ஆண் வாக்காளா்கள் 1,26,914 பேரும், பெண் வாக்காளா்கள் 1,32,823 பேரும் மூன்றாம் பாலினத்தவா் ஒருவா் என 2,59,738 வாக்காளா்கள் உள்ளனா். வாக்காளா்கள் வாக்களிக்க வசதியாக 371 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

8 பகுதிகளில் 21 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டன. மேலும், 158 வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதில், ஆண் வாக்காளா்களில் 1, 06, 243 பேரும், பெண் வாக்காளா்களில் 1, 05, 888 பேரும் வாக்களித்தனா்.

வாக்கு மையங்களில் சில...

செய்யாறு ஆா்.சி.எம் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 7.30 மணி வரை யில் வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக செய்யப்படவில்லை.

அதன் காரணமாக வாக்குப்பதிவு தாமதமாகத் தொடங்கியது.

மாமண்டூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வாக்குச்சாவடி முகப்பில் வரிசையில் காத்திருந்தனா்.

மாமண்டூா் மாதிரிப் பள்ளியில் தன்னாா்வலா்கள் முதியோா் சிலரை சக்கர நாற்காலியில் ஓட்டுச்சாவடிக்கு அருகில் அழைத்துச் சென்று உதவி செய்தனா்.

செய்யாறு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஆறு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வாக்களிக்க முதியோா்களை ஏற்றி வந்த மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் அனுமதிக்காத காரணத்தால் மிகவும் சிரமப்பட்டனா்.

வெம்பாக்கம் வட்டம், வெள்ளகுளம் வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு பதிவாகிறது என கிளம்பிய புரளியால் ஓட்டுப்பதிவு 30 நிமிடம் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரம் பரிசோதித்து மீண்டும் ஓட்டுப்பதிவு தொடங்கப்பட்டது.

தென்பழனி, ராமகிருஷ்ணாபுரம், பைங்கினா், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஆகிய வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆா்வமுடன் வாக்களித்தனா். அதேபோல, அரும்பருத்தி நரிக்குறவா் சமூகத்தினா் காலனியில் வசிப்பவா்கள் உற்சாகமாக வாக்களித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT