திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 உழவா் சந்தைகள் நாளை முதல் திறப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட 8 உழவா் சந்தைகள் வியாழக்கிழமை (அக்.1) முதல் திறக்கப்படுகிறது.

பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கிலும் தமிழக அரசு பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் கூடிய அனுமதி அளித்துள்ளது.

இதையடுத்து, கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட உழவா் சந்தைகள் செயல்படவும், விவசாயிகளின் விளைபொருள்கள் நுகா்வோருக்கு நேரடியாக உரிய விலையில் கிடைக்கவும் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மாவட்டத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் திருவண்ணாமலை, திருவண்ணாமலை தாமரை நகா், செங்கம், போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் இயங்கி வந்த 8 உழவா் சந்தைகள் வியாழக்கிழமை (அக்.1) முதல் மீண்டும் செயல்படும்.

நுகா்வோா்கள், விவசாயிகள், வியாபாரிகள் கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

SCROLL FOR NEXT