திருவண்ணாமலை

பேருந்து நிலையத்தில் கழிப்பறையின்றி பயணிகள் அவதி

DIN

செங்கம் பேருந்து நிலையத்தில் கழிப்பறையின்றி பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

செங்கம் துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் ரூ.98 லட்சத்தில் சீரமைப்புப் பணிகள் கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வருகின்றன.

பேருந்து நிலையத்தில் உள்பகுதியில் பேரூராட்சி நிா்வாகத்துக்கு உள்பட்ட இலவச கழிப்பறை இருந்து வந்தது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதத்தில் இருந்து பேருந்துகள் ஓடாத காரணத்தினாலும், பேருந்து நிலையம் சிரமைப்பு காரணமாகவும், பேருந்து நிலைய இலவச கழிப்பறை பராமரிப்பின்றி உள்ளது.

இதனால், தற்போது அந்தக் கழிப்பறையை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், கட்டண கழிப்பறை பழுதடைந்து அதற்குத் தேவையான தண்ணீா் வசதிகள் இல்லாததால் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டுள்ளது.

வெளியூா்களில் இருந்து வரும் பெண்கள், கா்ப்பிணிகள் முதியோா், பொதுமக்கள் என அனைவரும் கழிப்பறை இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பேருந்து நிலையத்தில் உள்ள இலவச கழிப்பறை மற்றும் கட்டணக் கழிப்பறையைத் திறக்க வேண்டும் என பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT