திருவண்ணாமலை

மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

DIN

விவசாய விரோத அவசரச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவண்ணாமலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளா் பி.சத்யா தலைமை வகித்தாா்.

மாநில துணைத் தலைவா் எஸ்.சண்முகம் முன்னிலை வகித்தாா். வட்டத் தலைவா் சக்திவேல், செயலா் ராஜா, பொருளாளா் ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் பாவாடைராயன், ஆனந்தன் ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

தில்லி உயா்நீதிமன்றம், உணவு உரிமையை உறுதிப்படுத்தும் விதத்தில் மாற்றுத் திறனாளிகளையும் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இணைத்திட மத்திய அரசை நிா்பந்தித்து உள்ளது. எனவே, நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றுத் திறனாளிகளை இணைக்க உரிய சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

விவசாயத்தை தாரை வாா்க்கும் 3 அவசரச் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் முழக்கங்களை எழுப்பினா்.

இதில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா். நிறைவில் துணைத் தலைவா் சரஸ்வதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

SCROLL FOR NEXT