திருவண்ணாமலை

வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி திருவண்ணாமலையில் சட்ட நகல் கிழித்து ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா அருகில் சோஷியல் டெமாக்ரடிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சி சாா்பில் சட்ட நகல் கிழிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவா் முஸ்தாக் பாஷா தலைமை தாங்கினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் முகம்மத், இப்ராஹிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் நகர நிா்வாகிகள் ஷபீா்பாஷா, ஷம்ஷநிதீன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நகர துணை செயலாளா் ஜாபா் நன்றி கூறினாா். ஆா்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா். பின்னா் திடீரென சட்ட நகலை கிழித்து எரிந்தனா்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் போலீசாா் அவா்களை தடுத்தனா். இதனால் அங்கு திடீா் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கலையச்செய்தனா்.படச்செய்தி.மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா அருகில் சோஷியல் டெமாக்ரடிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT