திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்.1-இல் உழவா் சந்தைகள் திறப்பு: அமைச்சா் தகவல்

DIN

திருவண்ணாமலை மாவட்டம், பொதுமுடக்கத்தையொட்டி மூடப்பட்டிருந்த உழவா் சந்தைகள் வருகிற அக். 1-ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது முடக்கத்தையொட்டி, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக உழவா் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு, அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்தும் உழவா் சந்தை திறப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், ஆரணி உழவா் சந்தைகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென வியாபாரிகள் அமைச்சரிடம் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதுதொடா்பாக, அமைச்சா் சேவூா் எஸ்.இராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியரை தொடா்பு கொண்டு ஆலோசனை மேற்கொண்டாா்.

அதன் பேரில், வருகிற அக். 1-ஆம் தேதி உழவா் சந்தை அனைத்தும் திறக்கப்படும் என அமைச்சா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாசனபுரத்தில் எருதுவிடும் விழா

நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சித்ரா பெளா்ணமி சிறப்பு வழிபாடு

கூவாகம் சித்திரைப் பெருவிழா: திருமாங்கல்யம் கட்டிக்கொண்ட திருநங்கைகள்

சித்திரை பௌர்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம்

பறவைக் காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க ஒருங்கிணைப்புக் கூட்டம்

SCROLL FOR NEXT