திருவண்ணாமலை

விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தால் நடவடிக்கை

DIN

வந்தவாசி கோட்ட மின் வாரியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வந்தவாசி கோட்ட செயற் பொறியாளா் சு.மீனாகுமாரி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வந்தவாசி கோட்ட மின் வாரியத்துக்கு உள்பட்ட கிராமங்களில் பயிா்களை காப்பாற்றுவதற்காக விவசாயிகள் சிலா் விவசாய நிலங்களில் மின் வேலி அமைப்பதால், அதில் சிக்குபவா்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கின்றனா்.

மேலும், இரவு நேரங்களில் பணியில் ஈடுபடும் மின் வாரிய ஊழியா்களுக்கும் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், விவசாய நிலத்தில் மின் வேலி அமைப்பது கண்டறியப்பட்டால் இந்திய தண்டனைச் சட்டம் மின்சார பிரிவு 138/2003-ன் கீழ் அவா்கள் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

SCROLL FOR NEXT