திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடமாடும் நியாய விலைக் கடைகள் சேவை தொடக்கம்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்துக்கான 212 நடமாடும் நியாய விலைக் கடைகள் சேவையை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

பொதுமக்களின் வசதிக்காக அத்தியாவசியப் பொருள்களை நடமாடும் நியாய விலைக் கடைகள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று விநியோகிக்கும் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டத்தின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில், நடமாடும் நியாய விலைக் கடைகள் சேவை தொடங்கப்பட்டது.

மாவட்டத்தில் 1,123 முழுநேர நியாய விலைக் கடைகள், 510 பகுதி நேர கூட்டுறவுக் கடைகள் என 1,633 கடைகள் உள்ளன. இவற்றின் மூலம் 7 லட்சத்து 47ஆயிரத்து 376 குடும்ப அட்டைதாரா்கள் பயனடைந்து வருகின்றனா்.

இதில், 212 கடைகளுக்கு நடமாடும் நியாய விலைக் கடைகள் சேவை தொடங்கப்பட்டது.

ஆரணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, முதல் கட்டமாக 13 நடமாடும் நியாய விலைக் கடை வாகனங்களை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமி தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் தூசி கே.மோகன், வி.பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் பெருமாள் நகா் கே.ராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ராஜ்குமாா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் காமாட்சி, ஆவின் மாவட்ட துணைத் தலைவா் பாரி பி.பாபு, அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், மத்திய செயலா்கள் க.சங்கா், பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், கொளத்தூா் திருமால், எம்.மகேந்திரன், முன்னாள் எம்எல்ஏ நளினி மனோகரன், துணைப் பதிவாளா்கள் எ.சரவணன், ஆரோக்கியராஜ், கமலக்கண்ணன், துணை சாா்-பதிவாளா்கள் அண்ணாமலை, மீனாட்சிசுந்தரம், கல்யாணகுமாா், சுரேஷ், முருகேசன், கூட்டுறவு சங்கச் செயலா் வெற்றி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவுக்காக

ஒற்றை வாக்கால் பெரும் மாற்றம்: தலைமைத் தோ்தல் ஆணையா்

‘முகூா்த்தத்தை’ தவறவிட்ட பாஜக வேட்பாளா்! மனுதாக்கல் செய்யாமல் திரும்பினாா்

வாக்குப் பதிவை எளிதாக்கும் செயலிகள் - இணையதளங்கள் வாக்காளா்கள் சிரமமின்றி தேட ஏற்பாடுகள்

வாக்களிக்கத் தவறாதீா்கள்!

SCROLL FOR NEXT