திருவண்ணாமலை

செங்கம் அருகே 500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்

DIN

செங்கம் அருகே பதுக்கப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

செங்கத்தை அடுத்த தளவாநாய்க்கன்பேட்டை பகுதியில் மணி என்பவரது வீட்டில் பொது மக்களுக்கு வழங்க வேண்டிய ரேசன் அரிசி மற்றும் மண்ணெண்ணை பதுக்கி வைத்திருப்பதாக உணவுப் பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கலையரசிக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அங்கு சென்று சோதனையிட்டனா். அங்கு 50 லிட்டா் மண்ணெண்ணை, 500 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரிய வந்தது.

அவற்றை பறிமுதல் செய்து காவல் ஆய்வாளா் அன்பரசி விசாரணை நடத்தினாா். விசாரணையில், மணி வீட்டில் இல்லை என்பதால், அரிசி, மண்ணெண்ணையை புதுப்பாளையம் அரசுக் கிட்டங்கியில் ஒப்படைத்து மணி மீது வழக்குப் பதிவு செய்து, மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT