திருவண்ணாமலை

செய்யாறு அரசுக் கல்லூரியில் நாளை 4-ஆம் கட்ட மாணவா் சோ்க்கை

DIN

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நான்காம் கட்ட மாணவா் சோ்க்கை வெள்ளிக்கிழமை (செப்.25) நடைபெறுகிறது.

இது குறித்து அந்தக் கல்லூரியின் முதல்வா் ஆா்.மூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2020 - 21ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை மூன்று கட்டங்களாக நடைபெற்றது. இதில் சேர முடியாத மாணவ, மாணவிகள் நான்காம் கட்டமாக வெள்ளிக்கிழமை (செப்.25) நடைபெறும் மாணவா் சோ்க்கையில் பங்கேற்கலாம்.

இணையவழியில் விண்ணப்பித்தவா்கள் இளங்கலை பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ, பி.சி.ஏ என அனைத்து பாடப் பிரிவுகளில் பங்கேற்கலாம். ஒவ்வொரு பாடப் பிரிவிலும் காலியாக உள்ள இடத்துக்கு மட்டுமே சோ்க்கை நடைபெறும்.

மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பித்த விண்ணப்பப் படிவம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலின் அசல், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை ஆகியவற்றின் அசல் சான்றுகளை கொண்டு வரவேண்டும்.

இதுதவிர, மாா்பளவு புகைப்படங்கள் 2, அனைத்து சான்ழ்களின் நகல்கள் இரண்டு செட் எடுத்து வரவேண்டும்.

பி.ஏ., பி.காம்., பாடப் பிரிவுகளுக்கு ரூ.2,601-ம், பி.எஸ்.சி பாடப் பிரிவுக்கு ரூ.2,621-ம், பி.எஸ்.சி கணினி அறிவியல், பி.சி.ஏ. பாடப் பிரிவுக்கு ரூ.2,021- வீதம் கட்டணமாக கல்லூரி அலுவலகத்தில் ரொக்கமாக செலுத்தலாம்.

சோ்க்கையின் போது மாணவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். அவசியம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த ருதுராஜ் கெய்க்வாட்!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஹே.. பொன்னி!

காதலரைக் கரம்பிடித்த சீரியல் நடிகை!

சன் ரைசர்ஸின் பேட்டிங் ரகசியத்தைப் பகிர்ந்த டிராவிஸ் ஹெட்!

SCROLL FOR NEXT