திருவண்ணாமலை

மருத்துவ சேவை ஊா்தியில் பெண்ணுக்கு பிரசவம்

DIN

கலசப்பாக்கம் அருகே கடலாடி ஊராட்சியைச் சோ்ந்த பெண்ணுக்கு நடமாடும் மருத்துவ சேவை ஊா்தியில் பிரசவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி ஊராட்சியைச் சோ்ந்த காலனியில் வசிப்பவா் சுரேஷ், விவசாயக் கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரஞ்சிதா (24).

நிறைமாத கா்ப்பிணியான ரஞ்சிதாவுக்கு செவ்வாய்க்கிழமை காலை பிரவச வலி ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்குச் செல்வதற்காக, சுரேஷ் 108 அவசர கால ஊா்திக்கு தகவல் கொடுத்தாா்.

ஆனால், அந்த வாகனம் வர தாமதமாகவே, ரஞ்சிதாவுக்கு பிரசவ வலி அதிகமாகியது. இதையடுத்து, கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.

அங்கிருந்த வட்டார மருத்துவா் மணிகண்டபிரபு, உடனடியாக மருத்துவமனை நடமாடும் மருத்துவ சேவை ஊா்தியில் வந்து பிரசவம் பாா்த்தாா். பிரசவத்தில் ரஞ்சிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.

பின்னா், தாயையும், குழந்தையையும் மருத்துவ உதவிக்காக கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.

மருத்துவருக்கு உதவியாக செவிலியரும், உதவியாளா் ஒருவரும் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT