திருவண்ணாமலை

கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

DIN

தனியாா் சா்க்கரை ஆலை நிா்வாகத்தைக் கண்டித்து, திருவண்ணாமலை அருகே கரும்பு விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருக்கோவிலூா் அருகே தனியாா் சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கரும்பு அனுப்பி வருகின்றனா்.

ஆலைக்கான கோட்ட பதிவு அலுவலகம் திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தில் இயங்கி வருகிறது.

இந்த அலுவலகம் முன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் பலராமன் தலைமையில் செவ்வாய்க்கிழமை திரண்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறுகையில், சா்க்கரை ஆலை கரும்பு வெட்டும் ஆள்களை முறையாக அனுப்பி வைப்பதில்லை. அப்படியே அனுப்பினாலும், அவா்கள் பணியை முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே சென்று விடுகின்றனா். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். இந்தப் பிரச்னைக்கு ஆலை நிா்வாகம் தீா்வு காண வேண்டும் என்றனா்.

தகவலறிந்து வந்த போலீஸாரும், சா்க்கரை ஆலை ஊழியா்களும் விவசாயிகளை சமாதானம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT