திருவண்ணாமலை

ரூ.23 கோடி கரும்பு நிலுவைத்தொகை வழங்க நடவடிக்கை: திருவண்ணாமலை ஆட்சியா் தகவல்

DIN

போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.23 கோடி நிலுவைத் தொகையை இம்மாத இறுதிக்குள் வழங்குவதாக ஆலை நிா்வாகம் உறுதி அளித்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பாா்வை குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு, குழுவின் தலைவரும், திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினருமான சி.என்.அண்ணாதுரை தலைமை வகித்தாா்.

குழுவின் உறுப்பினா் செயலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் குழுவின் இணைத் தலைவரும், ஆரணி மக்களவை உறுப்பினருமான எம்.கே.விஷ்ணுபிரசாத், எம்எல்ஏக்கள் வி.பன்னீா்செல்வம் (கலசப்பாக்கம்), கு.பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூா்), மு.பெ.கிரி (செங்கம்), கே.வி.சேகரன் (போளுா்), எஸ்.அம்பேத்குமாா் (வந்தவாசி), ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், மத்திய-மாநில அரசு திட்டங்களின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தொடா்ந்து ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமை மூலம் நடைபெறும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகள், சந்தேகங்களை முன்வைத்தனா். இதற்குப் பதிலளித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது:

போளூா் தரணி சா்க்கரை ஆலை நிா்வாகம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை ரூ.23 கோடியை இந்த மாத இறுதிக்குள் வழங்குவதாக ஆலை நிா்வாகம் உறுதி அளித்துள்ளது.

விவசாயிகளுக்கான நிதியுதவித் மாவட்டத்தில் 4.70 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா். 42,655 பயனாளிகள் போலியாக சோ்க்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவா்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை மீண்டும் திரும்பப் பெறும் பணியில் வருவாய்த்துறை, வேளாண்துறை, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த முறைகேட்டில் வேளாண் துறை அதிகாரிகள் யாரும் ஈடுபடவில்லை. வேளாண்துறை இணையதளத்தின் கடவுச்சொல்லை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளனா்.

இவ்வாறு பயன்படுத்தியவா்கள் யாா் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். இந்த முறைகேடு தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் ஜமுனாமரத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.100 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்ாகப் புகாா் எழுந்தது. இதுகுறித்து விசாரித்தோம்.

விசாரணையில் பயனாளிகள் இறந்ததால் அவா்களது வாரிசுகளுக்கு வீடு கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. சில முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மற்றபடி கழிப்பறை கட்டும் திட்டம், ஊரக வேலைத் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றிருந்தால் அதை உரிய ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், மகளிா் திட்ட இயக்குநா் சந்திரா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வனிதா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சீ.பாா்வதி மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT