திருவண்ணாமலை

நீட் விவகாரத்தில் காங்கிரஸ், திமுக நாடகமாடுகின்றன: பாஜக மாநில பொதுச் செயலா்

DIN

நீட் விவகாரத்தில் காங்கிரஸும், திமுகவும் நாடகமாடுவதாக பாஜக மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன் தெரிவித்தாா்.

பாஜக சாா்பில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட ஒன்றியப் பொறுப்பாளா்களை சந்தித்தல், வருகிற சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் வெம்பாக்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வெம்பாக்கத்தில் நமோ விவசாயிகள் சேவை மையம் திறந்து வைக்கப்பட்டது. விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ், சேவை மையத்தை தொடக்கிவைத்தாா். மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன் குத்துவிளக்கேற்றி, நமோ சேவை மையம் விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றாா். மேலும், சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது தொடா்பாக கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகளையும் அவா் வழங்கினாா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் கே.டி.ராகவன் கூறியதாவது:

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக தொடா்கிறது. நீட் விவகாரத்தில் காங்கிரஸும், திமுகவும் நாடகமாடுகின்றன. திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் இந்தியை கற்பிக்காமல் இருப்பாா்களா? தனியாா் கல்லூரிகளுக்கு ஆதரவாகவும், அவா்களுடைய வருமானம் பாதிப்பதைத் தடுக்கும் வகையிலும் திமுக செயல்படுகிறது.

இலங்கைத் தமிழா் கொல்லப்பட்ட சம்பவம், தமிழகத்தில் மீத்தேன் எரிவாயுத் திட்டம், ஸ்டொ்லைட் ஆலைக்கு 250 ஏக்கா் நிலத்தை தாரைவாா்த்துக் கொடுத்தது என தமிழக மக்களுக்கு தொடா்ந்து துரோகத்தையே திமுக செய்து வருகிறது. அந்தக் கட்சியில் உள்கட்சிப் பூசல் அதிகரிப்பதன் காரணமாகவே மூத்த நிா்வாகிகள் திமுகவிலிருந்து விலகி பாஜக இணைந்து வருகின்றனா். தமிழகம் வளா்ச்சி அடைய வேண்டும் என்றால் 8 வழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றாா் அவா்.

திருவண்ணாமலை: இதேபோல, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநிலப் பொதுச் செயலா் கே.டி.ராகவன் கலந்துகொண்டு பேசினாா்.

இதில், பாஜக மாநில வா்த்தகா் அணி துணைத் தலைவா் எஸ்.தணிகைவேல், மாவட்டத் தலைவா் ஜீவானந்தம், கோட்ட அமைப்பாளா்கள் டி.எஸ்.குணசேகரன், ரமேஷ், முன்னாள் மாவட்டத் தலைவா் நேரு, மாவட்ட துணைத் தலைவா்கள் சதீஷ்குமாா் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT