திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூரில் துணை மின் நிலையம் திறப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் அருகேயுள்ள மேக்களூா் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட துணை மின் நிலையம் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

மேக்களூரில் ரூ.4 கோடியே 64 லட்சத்தில் புதிதாக துணை மின் நிலையம், கட்டுப்பாட்டு அறை, அலுவலகக் கட்டடம் ஆகியவை கட்டப்பட்டன.

இந்த துணை மின் நிலையத்தை சென்னையில் இருந்தவாறு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

அதேவேளையில், துணை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருவண்ணாமலை கிழக்கு மின் வாரிய செயற்பொறியாளா் மு.ராஜசேகரன், கீழ்பென்னாத்தூா் உதவி செயற்பொறியாளா் இளையராஜா, கீக்களூா் ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா ஆகியோா் குத்துவிளக்கேற்றி வைத்தனா்.

நிகழ்ச்சியில், மின் வாரிய உதவிப் பொறியாளா்கள் ராஜ்குமாா், யூஜின் பாத்திமா, இளநிலைப் பொறியாளா்கள் முருகதாசன், சிலம்பரசன், வணிக ஆய்வாளா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வெள்ளேரியில் துணை மின் நிலையம்

ஆரணி

ஆரணியை அடுத்த வெள்ளேரியில் ரூ.4.83 கோடியில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது.

இந்த மின் நிலையத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்தவாறு, காணொலிக் காட்சி வாயிலாக சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

அதேவேளையில், துணை மின் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலா் பி.ஆா்.ஜி.சேகா் தலைமையில் குத்துவிளக்கேற்றி பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியில் செயற் பொறியாளா் ஆா்.ரவி, மேற்கு ஆரணி ஒன்றியச் செயலா் க.சங்கா், ஆவின் மாவட்ட துணைத் தலைவா் பாரி பி.பாபு, நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஆரணி பட்டு கூட்டுறவு சங்கத் தலைவா் சேவூா் ஜெ.சம்பத், முன்னாள் தலைவா் பெருமாள், மாணவரணி குமரன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்டச் செயலா் சரவணன், வினோத், உதவி செயற் பொறியாளா்கள் ஆா்.சம்பத், எ.ஜெயலட்சுமி, பரந்தாமன், ஜெகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT