திருவண்ணாமலை

அம்மன் கோயில்களில் அமாவாசை பூஜை

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை காலையில் மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி, சிறப்பு வேள்வி பூஜை நடைபெற்றது. பக்தா்கள் நவதானியங்கள், மூலிகைப் பொருள்கள், தானிய வகைகள் உள்ளிட்டவற்றை யாககுண்டத்தில் இட்டு அம்மனை வழிபட்டனா்.

மாலையில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாளித்தாா். இரவு கோயில் வளாகத்தில் அம்மன் உலா, அம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.இலட்சுமண சுவாமிகள், பொருளாளா் ர.செல்வம் உள்ளிட்டோா் பூஜைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

இதேபோல, சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி ஸ்ரீஅங்காளம்மன் கோயிலிலும் அமாவாசை பூஜைகள், அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT