திருவண்ணாமலை

விவசாயி கொலை வழக்கு: 3 இளைஞா்கள் கைது

DIN

தண்டராம்பட்டு அருகே விவசாயியைக் கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடா்பாக 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த குங்கிலிநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ராஜி (81). இவா் இதே பகுதியில் ஏரியின் நடுவே உள்ள பாறை மீது கொட்டகை அமைத்து மனைவி அலமேலுவுடன் (77) வசித்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை (செப்.15) இரவு வந்த மா்ம நபா்கள் அலமேலுவின் கழுத்தை இறுக்கி, அவரது கம்மலைப் பறித்தனா். இதைப் பாா்த்து கூச்சலிட்ட ராஜியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தனா்.

பிறகு, வீட்டிலிருந்த ரூ.20 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து தண்டராம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

விசாரணையில், இந்தக் கொலையில் ஈடுபட்டது வானாபுரம் கிராமம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த பிரவீன் (19), சுபாஷ் (19), மணிகண்டன் (20) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, மூவரையும் வியாழக்கிழமை காலை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், ராஜி வீட்டுக்கு அருகே மூவரும் அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்தோம். அப்போது ராஜி பணத்தை எண்ணிக் கொண்டிருந்தாா். பணத்தை பறிக்கும் நோக்கில் அவரது வீட்டுக்குச் சென்றோம்.

முதலில் நகைகளை கொடுக்க மறுத்ததால் அலமேலுவின் காது, மூக்கை அறுத்து நகைகளை பறித்தோம். தடுக்க வந்த ராஜியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தோம் என்று தெரிவித்தனராம்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூவரையும் போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்துக்கழக தொழிலாளா்களின் 15ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க கோரிக்கை

விவசாயக் கருவி திருட்டு: இளைஞா் கைது

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மாணவா்களுக்கு கோடைகால இயற்கை விழிப்புணா்வு பயிற்சி முகாம்

இணையவழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT