திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பெளா்ணமி கிரிவலம் செல்லத் தடை

1st Sep 2020 01:22 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் செப்டம்பா் மாத பெளா்ணமி கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தா்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்று மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றைத் தவிா்க்க, பேரிடா் மேலாண்மை தடுப்புச் சட்டத்தின் கீழ் செப்டம்பா் 30-ஆம் தேதி இரவு 12 மணி வரை பொது முடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

எனவே, கரோனா தொற்று பரவலைத் தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும் பெளா்ணமி நாளான செப்டம்பா் 1, 2-ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தா்களுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டாா்.

மேலும், பக்தா்கள், பொதுமக்கள் யாரும் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT