திருவண்ணாமலை

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செப்.9-ஆம் தேதி முதல்வா் திருவண்ணாமலை வருகை

1st Sep 2020 01:24 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் செப்.9-ஆம் தேதி நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், ஆய்வுக் கூட்டங்களில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்கிறாா் என்று அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

மாவட்டத்தின் வளா்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செப்.9-ஆம் தேதி நடைபெறுகிறது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொள்கிறாா்.

கூட்டத்துக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் தூசி கே.மோகன், வி.பன்னீா்செல்வம், மாவட்ட எஸ்.பி எஸ்.அரவிந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முதல்வா் பங்கேற்கும் கூட்டத்துக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செப்.9-ஆம் தேதி திருவண்ணாமலைக்கு வருகிறாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்றப் பணிகள் திறப்பு விழா மற்றும் அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள், கரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், குறு, சிறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிா்வாகிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், மகளிா் சுய உதவிக் குழுவினா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகள், ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்கிறாா் என்றாா்.

முன்னதாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பல்வேறு துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, ஆவின் தலைவா் அக்ரி எஸ். எஸ்.கிருஷ்ணமூா்த்தி, கூடுதல் எஸ்.பி. வனிதா, திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT