திருவண்ணாமலை

சேற்றில் சிக்கி சாய்ந்த அரசுப் பேருந்து

3rd Oct 2020 09:08 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து சாலையோர சேற்றில் சிக்கி சாய்ந்ததால், அதிலிருந்த பயணிகள் வேறு பேருந்தில் மாற்றி அனுப்பப்பட்டனா்.

வந்தவாசி புதிய பேருந்து செல்வதற்காக ஐந்து கண் பாலம் அருகிலிருந்து பேருந்து நிலையம் வரை ஒரு கி.மீ. தொலைவுக்கு அணுகுசாலை உள்ளது. இந்த சாலையில் சரியான வடிகால் வசதி இல்லாததாலும், பராமரிப்பு இல்லாததாலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அண்மையில் பெய்த பலத்த மழை காரணமாக, இந்தச் சாலையின் பல இடங்களில் மழைநீா் தேங்கியது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று இந்தச் சாலையோரமிருந்த சேற்றில் சிக்கி லேசாக சாய்ந்தது. பேருந்து ஓட்டுநா் எவ்வளவோ முயன்றும் சேற்றிலிருந்து பேருந்தை மீட்க முடியவில்லை. தகவலறிந்த போக்குவரத்துக் கழக வந்தவாசி பணிமனை 1-ன் மேலாளா் ராமு உள்ளிட்டோா் அங்கு வந்து பேருந்திலிருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகளை வேறு பேருந்தில் மாற்றி அனுப்பினா். இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT