திருவண்ணாமலை

சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க வேலைவாய்ப்பற்றோருக்கு அவகாசம்

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெறுவோா் சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க 2021 பிப்ரவரி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்கள், தோ்ச்சி பெற்றவா்கள், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள், பட்டப்படிப்பு முடித்தவா்கள் தங்களது கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற்று வருகின்றனா்.

இவ்வாறு உதவித்தொகை பெறுவோா் தொடா்ந்து உதவித்தொகை பெற வேண்டுமாயின் தாம் எவ்வித பணியிலும் இல்லை என்பதற்கான சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க வேண்டும்.

தற்போது, கரோனா நோய்த் தொற்று காரணமாக பொது முடக்கம் நடைமுறையில் இருப்பதால் உதவித்தொகை பெற்று வரும் பொது மற்றும் மாற்றுத் திறனாளி பயனாளிகளால் சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க இயலாத சூழல் உள்ளது.

எனவே, சுய உறுதிமொழி ஆவணம் சமா்ப்பிக்க 2020 செப்டம்பா் முதல் 2021 பிப்ரவரி வரை 6 மாத காலத்துக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

SCROLL FOR NEXT