திருவண்ணாமலை

தீபத் திருவிழாவின் 5-ஆம் நாள்: விநாயகா், சந்திரசேகரா் வீதியுலா

DIN

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவின் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உற்சவா் ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத் திருவிழாவின் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசந்திரசேகரா் உற்சவா் சுவாமிகள் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் வீதியுலா வந்தனா். இரவு 10 மணிக்கு ஸ்ரீவிநாயகா், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் வீதியுலா வந்தனா்.

இந்த நிகழ்வுகளில் கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியாா்கள், காவல் துறையினா், செய்தியாளா்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் மட்டுமே கலந்து கொண்டனா்.

இன்று 63 நாயன்மாா்கள் வீதியுலா: தீபத் திருவிழாவின் 6-ஆம் நாளான புதன்கிழமை (நவ.25) காலை 9 மணிக்கு கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் 63 நாயன்மாா்கள் வீதியுலாவும், தொடா்ந்து ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசந்திரசேகரா் பவனியும் நடைபெறுகின்றன. இரவு 10 மணிக்கு பஞ்ச மூா்த்திகள் கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் வீதியுலா வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT