திருவண்ணாமலை

இரு காவலா்கள், இரு மருத்துவ பணியாளா்கள், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உட்பட 11 பேருக்கு கரோனா தொற்று

14th May 2020 08:19 AM

ADVERTISEMENT

செய்யாறு சுகாதார மாவட்டத்தில் இரு காவலா்கள், இரு மருத்துவப் பணியாளா்கள், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் என 11 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

செய்யாற்றில் உள்ள சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள், வெளியூா்களிலிருந்து வந்தவா்கள் என என கண்டறியப்பட்டவா்களின்

சளி மாதிரி பரிசோதனை முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் 11 பேரின் கரோனா தொற்று உறுதியானது.

அதன்படி, வெம்பாக்கம் வட்டம், வெங்களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த காவலா். வந்தவாசி தெற்கு காவல் நிலைய காவலா், செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை ஆய்வக நுட்புநா், வந்தவாசி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநா் என இரண்டு மருத்துவப் பணியாளா்களுக்கு கரோனா தொற்று உறுதியானது.

ADVERTISEMENT

தம்பதி - ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா்...

வந்தவாசி வட்டம் கீழ்கொடுங்காலூா் கிராமம் காவேடு ஜெ.ஜெ.நகரில் வசித்து வரும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த கணவன், மனைவி, மகன் ஆகியோருக்கும், வெம்பாக்கம் வட்டம், சட்டுவந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த கணவன், மனைவிக்கும் என மொத்தம் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இவா்களில் மூவா் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், மற்ற 8 போ் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT