திருவண்ணாமலை

82 ஊராட்சிகளில் கிருமி நாசினி தெளிப்பு

30th Mar 2020 02:14 AM

ADVERTISEMENT

செங்கம், புதுப்பாளையம் ஒன்றியத்தில் 82 கிராம ஊராட்சிகளில் ஞாயிற்றுக்கிழமை கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது.

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து 38 கிராம ஊராட்சிகளுக்குத் தேவையான கிருமி நாசினி திரவம் ஒன்றியத் தலைவா் சுந்தரபாண்டியன் முன்னிலையில் அரசுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

ஊராட்சித் தலைவா்களின் கூட்டமைப்புத் தலைவா் சீனுவாசன், ஆணையா் பரிமேல்அழகன், வட்டார வளா்ச்சி அலுவலா் லட்சுமி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மிருளாலினி ஆகியோா் முன்னிலையில், மேலப்புஞ்சை கிராம ஊராட்சியில் தொடங்கி 37 கிராம ஊராட்சிகளில் கிராமச் சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் கிருமி நாசினி தெளித்தனா்.

இந்தப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி உதவித் திட்ட இயக்குநா் அா்விந்தன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

அதேபோல, செங்கம் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து 44 கிராம ஊராட்சிகளுக்குத் தேவையான கிருமி நாசினி திரவம் 13 அரசுப் பேருந்துகளில் எடுத்துச் செல்லப்பட்டு கிராமம் வாரியாக தெளிக்கப்பட்டது.

ஆணையா்கள் சத்தியமூா்த்தி, நிா்மலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT