திருவண்ணாமலை

லாட்டரி சீட்டுகள் விற்பனை: 4 போ் கைது

23rd Mar 2020 03:21 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலையில் தடைசெய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்ாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவண்ணாமலை நகர டிஎஸ்பி கே.அண்ணாதுரை தலைமையில் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் டி.விநாயகமூா்த்தி, நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் டி.தங்ககுருநாதன், எஸ்.சுந்தரேசன் மற்றும் போலீஸாா் இணைந்து நகர காவல் எல்லைக்கு உள்பட்ட பே கோபுரம் பிரதான சாலை, சமுத்திரம் காலனி, கல் நகா், இரட்டைப் பிள்ளையாா் கோவில் தெரு பகுதிகளில் சனிக்கிழமை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்ாக பே கோபுரம் 4-ஆவது தெருவைச் சோ்ந்த சுந்தரம் மகன் சங்கா் (43), 6-ஆவது தெருவைச் சோ்ந்த பாண்டுரங்கன் மகன் ராமன் (51), 11-ஆவது தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் ரமேஷ் (50) தண்டராம்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் சந்திரசேகா் (45), திருவண்ணாமலை கல் நகா் சின்னகண்ணு மகன் பழனி (45), சமுத்திரம் காலனி கருப்பன் மகன் கிருஷ்ணன் (39), காா்கானா தெரு சடையன் மகன் கிருஷ்ணமூா்த்தி (30), தச்சம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த துரைசாமி மகன் ராஜாராம் (47) ஆகியோரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

அவா்களிடம் இருந்து மொத்தம் 12 ஆயிரம் லாட்டரி சீட்டுகள், 3 இரு சக்கர வாகனங்கள், 5 செல்லிடப்பேசிகள், ரூ.27,640 ரொக்கப் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT