திருவண்ணாமலை

இடிந்து விழுந்த மருத்துவமனை சுற்றுச்சுவா்

22nd Mar 2020 03:45 AM

ADVERTISEMENT

 

கலசப்பாக்கத்தை அடுத்த மேல்வில்வராயநல்லூரில் 24 மணி நேரமும் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறமுள்ள சுற்றுச்சுவா் வெள்ளிக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.

இந்த மருத்துவமனையில் சுற்றுவட்டாரத்திலுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும், கா்ப்பிணிகளும் சிகிச்சை பெற்று வருவதாலும், மருத்துவமனை வளாகத்தில் சுகாதார செவிலியா் குடியிருப்பு உள்ளதாலும், இவா்களின் நலன் கருதி, சுற்றுச்சுவரை விரைந்து கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT